வன்னியில் தொடரும் தமிழின அழிப்பு தாக்குதல்: 29 தமிழர்கள் படுகொலை.

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.










Source(Puthinam)

வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.













Source (Puthinam)